ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசன் என பார்க்கப்படும் புதன் பகவான் குறுகிய கால இடைவெளியில் தன்னுடைய ராசியை மாற்றும்.

அப்படி மாறும் பொழுது குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில், புத்திசாலித்தனம் ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் 1 மாதத்தில் 2025 ஆம் ஆண்டின் நிறைவுக்கு வரவுள்ளது. அதற்குள் புதன், தன்னுடைய ராசியை 5 தடவை மாற்றப்போகிறார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பயணம் செய்வார், டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசிக்கு பயணம் செய்வார், டிசம்பர் 10 ஆம் தேதி அனுசம் நட்சத்திரத்தில் பயணம் செய்வார், டிசம்பர் 20 ஆம் தேதி கேட்டை நட்சத்திரத்திலும், டிசம்பர் 29 ஆம் தேதி மூலம் நட்சத்திரத்திலும் பயணம் செய்யப்போகிறார்.

அந்த வகையில், புதன் பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.   

வருட இறுதியில் ஜாக்போட்.. தொழிலில் எதிர்பாராத ஆட்டம் காணும் 3 ராசிகள் | Mercury Transit 5 Times In December 2025

மகர ராசியில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் 5 தடவைகள் புதன் பெயர்ச்சியில் அடைவதால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சுயமரியாதையை தூண்டும் விடயங்கள் அதிகமாக நடக்கும். வேலையில் வெளிநாட்டு பயணங்கள் போகும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அதிகமான லாபம் கைக்கு வரும், பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் இந்த காலப்பகுதியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். 
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதம் நடக்கும் புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல் அதிகமாக வேலைச் செய்யும். வீட்டில் நல்ல காரியம் நடக்க வாய்ப்பு உள்ளது. பணிச் செய்யும் இடங்களில் நீங்களே சாதனையாளராக இருப்பீர்கள், பரம்பரை தொழிலில் பாரிய லாபம் வரும், வாழ்க்கை துணையுடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். 
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலன் என்ன? வருட இறுதி மாதமான டிசம்பரில் புதன் பெயர்ச்சிகள் அதிகமாக இருப்பதால் துலாம் ராசியினருக்கு எதிர்பாராத அளவு அதிர்ஷ்டம் கிடைக்கும். நேர்மறையான செய்திகளை அதிகமாக கேள்விப்படுவீர்கள். புதிய வேலைகளில் இருந்து உங்களை அழைப்பார்கள்.வாழ்க்கை துணையுடன் நேரம் கழிப்பதற்கு இந்த மாதம் சிறந்ததாக இருக்கும். பணத்தை சம்பாதிக்கும் ஆசை இருந்தால் இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.