அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர் தொடர்வதால் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருநாடுகளுக்கும் நடுவே உள்ள நாகோர்னோ, காரபாக் பகுதிக்காக இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட போதிலும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவதால் போர் மீண்டும் தொடர்ந்து வருகிறது.

அஜர்பைஜான் படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குடியேற்றங்கள் மீது ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாக ஆர்மீனியா குற்றம் சாட்டியது.

அதேநேரம், அஸர்பைஜான் படைகள் இரவில் அஸ்கெரான் மற்றும் மார்டூனியில் குடியேற்றங்கள் மீது பீரங்கிகளை வீசியதாக நாகோர்னோ-கராபாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இருநாடுகளுக்கு இடையே மோதல் தொடர்வதால் நட்பு நாடுகளுடன் உறவு மோசமாகும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.