பொதுவாக காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டார் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியம்.
காதல் திருமணம் செய்தவர்கள் கூட தற்போது அதிகமாக விவாகரத்து பெறும் நிலையே காணப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் திருமண பந்தத்தில் இணையும் இருவருக்கும் இடையில் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமையும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆழ முயற்சிப்பதுமே ஆகும்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசி ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு அற்புதமான இணக்கம் காணப்படுமாம்.
இவர்கள் ஆத்ம துணையினர் என குறிப்பிடும் அளவுக்கு இவர்களுக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்கும். இப்படிப்பட்ட ராசி ஜோடிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் மற்றும் துலாம்
இந்த இரு ராசியினரில் ஒன்று நெருப்பு மற்றொன்று காற்று என கருதப்படுகன்றது. இந்த இரரண்டின் கலவை நெருப்புப் புயல் போல் தனித்துவமாகதாக இருக்கும்
துலா ராசியினர் வசீகரமான மற்றும் சீரான ஆளுமை கொண்டவர்கள். இருவரும் சேர்ந்தால் நட்பு வாழ்க்கை அமையும்.இந்த இரண்டு ராசிகளின் சேர்கை காந்த புலத்தை போல் இருக்கும். எதிர் எதிர் காந்த புலங்கள் ஒன்றுடன் ஒன்று கவருவதை போல் இந்த ராசி ஜோடிகளின் சேர்க்கை அமையும்.
ரிஷபம் மற்றும் கன்னி
இந்த இரண்டு ராசியினர் இணைந்தால் வீட்டில் சாந்தமும் அமைதியம் நிலவும். இவர்கள் எளிமையான ஆளுமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அவரது இலக்குகளை அடைவதில் ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களின் உறவு எல்லா வகையிலும் இனிமையானதாக அமையும்.இந்த இரண்டு ராசியினர் ஜோடி சேர்ந்தால் இவர்களை விட மகிழ்ச்சியானவர்கள் இருக்கவே முடியாது.
மிதுனம் மற்றும் கும்பம்
இந்த இரண்டு ராசியினருக்கும் பொது அறிவு விடயங்களின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அவர்கள் இணைந்தால் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், உரையாடவும், விவாதம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதனால் இருவரின் அறிவும் மேம்டபடும்.
இந்த இரண்டு ராசியினரும் இணைந்தால் இவர்களின் சேர்க்கை அமோகமாக இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
கடகம் மற்றும் மீனம்
இந்த இரண்டு ராசியினரும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வதில் வல்லவர்கள். இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் வாக்குவாதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
பரஸ்பர புரிதல், மரியாதை என இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களே இருக்கும். அதனால்தான் இந்த ஜோடி தனித்துவமானதாக அமையும்.