எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ரீதியில் நடைபெறும் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல் அபாயம் உருவெடுத்தது. இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்றது.
குறித்த பதற்றத்தை தணிப்பதற்காக இருநாடுகளின் தலைவர்களும் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் குறித்த முயற்சி தோல்வியை தழுவி வருகின்றது.
இருநாடுகளும் இதுவரை 7 கட்டங்களாக எல்லைப் பதற்றத்துக்கு முடிவு கட்ட கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், 8ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கான திகதியை இறுதி செய்யும் பணியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.