ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே வாழ்வில் நேர்மைக்கும், உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் எந்த உறவில் இருந்தாலும் மிகுந்த விசுவாசத்துடன் நடந்துக்கொள்வார்களாம்.
அப்படி விசுவாசம் மற்றும் நேர்மையின் மறு உருவமாகவே வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், மற்றவர்களை வசீகரிக்கும் அழகிய தோற்றத்தையும், ஆடம்ப மோகத்தையும் கொண்டிருப்பார்ள்.
இவர்களின் அழகுக்கு யாரும் எளிதில் வசப்படு்வார்கள். ஆனால் இந்த ராசி பெண்கள் தங்களின் துணைக்கு மிகுந்த விசுவாசியாக இருப்பார்கள். இவர்கள் எந்த உறவில் இருந்தாலும் அதில் நேர்மையான இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ரிஷப ராசி பெண்ணின் விசுவாசம் அசைக்க முடியாதது, மேலும் அவர் தனது அன்புக்குரியவர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் விசுவாசமானவர்களாகவும், மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவுமத் இருப்பார்கள்.
இவர்கள் தனிப்பட்ட ரகசியங்களையும், மற்றவர்களின் ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.ஆனால் அவர்களின் விசுவாசம் நம்பிக்கை மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பு மூலம் உறவுகளிடத்தில் உண்மையானவர்களாக இருப்பார்கள்.
ஒரு விருச்சிக ராசி பெண்ணின் காதலை பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இவர்கள் காதலில் ஒரு போதும் துரோகம் செய்யவே மாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசி பெண்கள் தங்கள் கடமை உணர்வு மற்றும் அர்ப்பணிப்புக்கு பெயர்பெற்றவர்களாக இருப்பதால், இவர்களிடம் நேர்மையான குணமும் இயல்பாகவே இருக்கும்.
தகவல்தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படும் கன்னி ராசி பெண்கள் நடைமுறைவாதிகளாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எதிலும் அதிக நேர்த்தியையும் பரிபூரணத்தையும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர்கள்.
கன்னி ராசி பெண்ணின் விசுவாசம் அவளுடைய செயல்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது,இவர்கள் ஒரு உறவில் இணைந்த பின்னர் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்கள்.