பொதுவாகவே உடல் ஆரோக்கியமாவும் சீராகவும் இயங்க வேண்டும் என்றால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஆரோக்கியமாக இயங்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில் நமது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படும் மூளை நமது தலை பகுதியில் காணப்படுகின்றது.

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Is There Brain Activity During Sleep

மூளை அதன் தொழிற்பாடுகளை சரியாக செய்தால் தான் மற்ற பாகங்கள் சீராக இயங்க முடியும். இவ்வாறு மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும் மூளைக்கு ஓய்வு இருக்கின்றதா என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

நாம் தூங்கும் போது நமது மூளையும் தூங்கி விடுமா? அல்லது மூளைக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் என்பது போன்ற மூளை தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Is There Brain Activity During Sleep

மூளையின் செய்ல்பாடுகள் சீராக இருப்பதற்க  தூக்கம் மிகவும் அவசியம். ஆனால்  தூக்கத்தின் போது மூளை ஓய்வெடுக்குமா என்று கேட்டால் இதில் பாதி உண்மை இருக்கின்றது. உண்மையில் நாம் தூங்கினாலும் நமது மூளையானது அதன் செய்ல்பாட்டை முழுமையாக நிறுத்திக்கொள்வது கிடையாது

மூளையின்  செய்பாடு மற்ற பாகங்களை விட சற்று குறைவாக இருக்மே தவிர, முழுமையாக ஓய்வில் இருக்காது. தூக்கத்திலும் நினைவாற்றல் மற்றும் உடல் குணமடைதல் போன்ற முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது.

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Is There Brain Activity During Sleep

சுவாசம், அதயதுடிப்பு, உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய தொழிற்பாடுகளை நாம் தூங்கும் போது மூளை நிறுத்தினால் உயிர் பிழைக்கவே முடியாது. நாம் தூக்கத்தில் இருக்கும் போது திடீரென எழும் சத்தம், நச்சு வாசனைகள் மற்றும் ஆபத்துகளின் போது விரைவாக செயல்பட மூளையின் சில பகுதிகள் எப்போதும் தயார் நிலையில் தான் இருக்கும்.

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Is There Brain Activity During Sleep

ஆழ்ந்த தூக்கத்தின் போது மூளையின் முக்கிய பகுதியான glymphatic system செல்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை விரிவுப்படுத்துகின்றது. அதன் மூலம் பகல் முழுவதும் உடலில் சேர்ந்த நச்சுப்பொருட்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற கழிவுகளை மூளை சுத்தம் செய்கின்றது. இது மூளையானது தனக்கு தானே செய்துக்கொள்ளும் ஆழ்ந்த சுத்தமாகும்.

எனவே நாம் தூங்கினாலும் மூளையானது தகவல்களை ஒழுங்குப்படுத்தல் தன்னை தானே சுத்தம் செய்தல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுகின்றது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.