தற்போது இளம் வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது. முன்னர் எல்லாம் நரை முடி வயது அதிகமானால் மட்டுமே வரும் என்று ஒரு காலம் இருந்தது.

நமது மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, முடி நரைப்பது மட்டுமல்லாமல், உடலுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபட பலரும் பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் விரைவாக முடியில் நிறம் மாறுவதற்கு இரசாயனம் சேர்க்கபட்டு விற்கப்படும்.

வெள்ளை முடியை கருப்பாக்க இனி சாயம் வேண்டாம்: இந்த காய் இருந்தால் போதும் | White Hair Turn Black Hair Remedies Amla Beauty

இது உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து பல பிரச்சனைகளை கொண்டு வரும். இதற்கு நாம் வீட்டிலேயே சில பொருட்களை வைத்து ஆரோக்கிமான முறையில் நரைமுடியை கருப்பாக்க முடியும்.

 நரைமுடியை கருப்பாக்க உதவும் வீட்டு வைத்தியம்

நெல்லிக்காய்: நெல்லிக்காய் ஒரு சிறந்த பழம். இது ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் மட்டுமல்ல, முடியை கருப்பாக்குவதற்கும் உதவியாக இருக்கும். நெல்லிக்காயை காய வைத்து அரைத்து பொடியாக முடியில் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை முடியைப் போக்கலாம். 

வெள்ளை முடியை கருப்பாக்க இனி சாயம் வேண்டாம்: இந்த காய் இருந்தால் போதும் | White Hair Turn Black Hair Remedies Amla Beauty

தயிர்: தயிர் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். உங்களுக்கு நரை முடி பிரச்சனை இருந்தால், மஞ்சளை தயிருடன் கலந்து தலைமுடியில் தடவலாம். இது முடியை கருமையாக்க உதவும். 

வெள்ளை முடியை கருப்பாக்க இனி சாயம் வேண்டாம்: இந்த காய் இருந்தால் போதும் | White Hair Turn Black Hair Remedies Amla Beauty

வெங்காயம்: கோடை காலத்தில் வெங்காயம் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள பண்புகள் உடலை வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். நீங்கள் நரை முடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயச் சாற்றைப் பயன்படுத்தலாம்.