பொதுவாகவே அனைவருக்கும் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.இதன் காரணமாகதான் நாம் உறவுகளுடன் இணைந்து வாழ்கின்றோம்.
உலவில் எந்த ஒரு மனிதனும் முழுமையாக தனித்து இயங்கவே முடியாது. நம் அன்றாட வேலைகளை செய்து முடிப்பதற்கே பலரின் உதவியை பெற்றுக்கொள்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றம் விசேட பண்புகளில் பெரிதும் தாக்கம் செலுத்தும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் எப்போதும் உறவுகளுடன் இணைந்திருப்பதை தொல்லையாகவும் தங்களின் சுதந்திரத்தை அபகரிக்கும் செயலாகவும் நினைக்கின்றனர். அப்படி தனிமையை விரும்பும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் லட்சியத்தை நோக்கமாக கொண்டிருப்பார்கள். உறவுகளின் உணர்வுகள் குறித்து இவர்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.
இவர்கள் தங்களின் உழைப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதிக அக்கறை செலுத்துகின்றார்கள்.
இவர்களின் இந்த குணத்தை புரித்து கொள்ளாத யாருடனும் இவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். தனிமையில் இருப்பதால் அதிகம் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமாக சிந்தனை மற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உறவுகளுடன் பிணைப்பில் இருப்பதை விடவும் தனிமையில் இருக்கும் போது உட்சாகமாகவும் சுதந்திரமாகவும் உணர்கின்றார்கள். இதனால் எப்போதும் தனித்து இயங்குவதையும் தனிமையில் நேரத்தை செலவிடுவதையும் அதிகம் விரும்புகின்றார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்களளுக்கு உறவுகளின் மகத்துவம் புரிவதே இல்லை. இவர்கள் தனிமையில் இருப்பதையே அதிகம் விரும்புகின்றார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கயுளுக்கு எவ்வளவு பாசமான உறவுகள் கிடைத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனிமையில் இருக்கவே ஆசைப்படுவார்கள்.