பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள், ஆயுள்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அப்படி முதுமையிலும் உடல் ஆரோக்கியாத்தோடு நீண்ட காலம் வாழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடகம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதனால் இவர்களின் வாழ்க்கையை நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ விரும்புவதால், அவர்கள் முதுமை வரை வாழ்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
முடிந்தவரை நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இருக்க வேண்டும் என்றும் இவர்கள் ஆசைப்படுவதால் ஆரோக்கிய விடயங்களில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இது தூண்டப்படுகிறது, ஏனெனில் கடகம் ராசிக்காரர்கள் மிகவும் குடும்பம் சார்ந்த மற்றும் அக்கறையுள்ள மக்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் மீது மிகுந்த ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவான ராசியாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்களிடம் காணப்படும் மனவலிமை இவர்களை பல நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன், எதிர்மறை ஆற்றல்கள் இவர்களை தாக்குவதையும் தடுக்கின்றது.
இவர்கள் வாழ்க்கையை அனுபவித்த வாழவேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் உறுதியாக இருப்பதால், நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை ஈர்க்கின்றார்கள்.
கன்னி
ராசிக்காரர்களும் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றார்கள்.இவர்களின் குறைந்த மன அழுத்தம் நீண்ட ஆயுளை பரிசாக கொடுக்கின்றது.
இவர்கள் ஏனைய அனைத்து ராசிகளையும் விட வாழ்க்கையின் மீது மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.இவர்களின் அதீத ஆசையால் நீண்ட ஆயுளுடன் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்.
இவர்களின் மனம் உடலை உடவும் வலிமை கொண்டதாக இருப்பதால், நோய்களில் இருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். இதுவும் இவர்களின் நீண்ட ஆயுள் ரகசியமாக பார்க்கப்படுகின்றது.