பொதுவாகவே பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையில் உறவு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், குழந்தைகளை கையாளுவதில் பெரும்பாலான பெற்றோர்கள் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

குழந்தைகள் மீது அதிகமாக பாசம் வைத்துள்ள பெற்றோரும் கூட குழந்தைகள் தங்களின் விருப்பங்களுக்கு மாறாக முடிவெடுக்கும் பட்சத்தில் அல்லது சொல்லுக்கு கட்டுப்படாத போது திட்டவும், அடிக்கவும் செய்கின்றார்கள்.

parenting tips: குழந்தைகளை திட்டாமல் , அடிக்காமல் உங்க பேச்சை கேட்க வைக்கணுமா? | How To Discipline Your Child Healthy Way

உண்மையில் ஒரு குழந்தையை திட்டுவதாலும், அடிப்பதாலும் அதன் நடத்திதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

மாறாக பெற்றோர் மீதான வெறுப்பு மற்றும் பயத்தை மாத்திரமே ஏற்படுத்த முடியும். குழந்தைகளை அடிக்காமலும் திட்டாமலும் அவர்களை சரியான முறையில் வளர்ப்பதற்கு உளவியல் ரீதியில் எவ்வாறான வழிகளை கையாள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

parenting tips: குழந்தைகளை திட்டாமல் , அடிக்காமல் உங்க பேச்சை கேட்க வைக்கணுமா? | How To Discipline Your Child Healthy Way

பொதுவாக குழந்தைகள் நல்ல விடயங்களை செய்யும் பொது அமைதியாக இருக்கும் பெற்றோர், தீய செய்ல்களை குழந்தைகள் செய்யும் போது மட்டும் அதற்கு எதிர்வினை புரிகின்றார்கள். உண்மையில் குழந்தைகள் நல்ல செயல்களுக்காக பாராட்டப்படும் போது அவ்வாறான செய்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டப்படுகின்றார்கள். 

குழந்தைகள் செய்யும் சிறிய செயல்களுக்கு பெற்றோர் பாராட்ட வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் பிள்ளை செய்த வேலையை நன்றாகப் புகழ்ந்து பேசுவதை வழக்கமாகிக்கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை வீட்டுப்பாடத்தை சரியான நேரத்தில் முடிப்பது, ஒருவருக்கு உதவுவது அல்லது பொய் சொல்லாமல் இருப்பது போன்ற நல்ல விஷயங்களைச் செய்யும்போது, இவர்கள் குறித்து நீங்கள் பெருமைப்படுவதை அவர்களிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். இதுவே அவர்களின் நடத்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

எந்த விடயத்தையும் குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்காதீர்கள். அதற்கு பதிலாக நன்மை மற்றும் தீமைகளை எடுத்து கூறி முடிவுகளை உங்கள் குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். சுதந்திரம் பல்வேறு குற்ற செய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆற்றல் கொண்டது.

parenting tips: குழந்தைகளை திட்டாமல் , அடிக்காமல் உங்க பேச்சை கேட்க வைக்கணுமா? | How To Discipline Your Child Healthy Way

உதாரணத்துக்கு, வெளியே குளிராக இருக்கின்றது குழந்தை ஸ்வெட்டர் அணிய விரும்பவில்லை என்றால், அவரை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, 'வெளியே மிகவும் குளிராக இருக்கிறது, இப்போது ஸ்வெட்டர் அணிந்தால் உன்னால் வெளியில் செல்லும் போது அந்த பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். என்று கூறி முடிவுகளை குழந்தைகளிடம் கொடுத்துவிடுங்கள். 

முதல் தடவை சில நேரம் இவர்கள் ஸ்வெட்டர் அணிய வேண்டாம் என்று முடிவு செய்தாலும் நீங்கள் அவர்களுக்கு கொடுத்த சுதந்திரம் அவர்களை இரண்டாவது முறை சரியான முடிவை எடுக்க உதவும். 

நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். இது அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு சரியாக முறையாக இருக்கும். 

parenting tips: குழந்தைகளை திட்டாமல் , அடிக்காமல் உங்க பேச்சை கேட்க வைக்கணுமா? | How To Discipline Your Child Healthy Way

குழந்தைகளின் மனநிலை எப்போதும் பாராட்டுகளுக்கு ஏங்கும். இவர்களை பராட்டுவதும் பரிசுகளை கொடுத்து மகிழ்விப்பதும்  இவர்களின் நல்ல நடத்தையில் பெரும் பங்கு வகிக்கின்றது.

ஒரு குறும்புக்கார குழந்தையை புத்திசாலியாக்க, ஒரு புத்திசாலித்தனமான முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம், குழந்தை தனது தவறின் விளைவை உணரச் செய்ய வேண்டும். இவர்களை திட்டுவதற்கு பதிலான இவர்களிடம் அன்பாக எடுத்து சொல்லுவது மற்றும் சரியாக விதத்தில் புரிய வைப்பது போன்ற வழிகள் குழந்தைகளின் சரியான மற்றும் ஒழுக்கமாக நடத்தைக்கு பெரிதும் துணைப்புரியும்.