சிலரின் முகம் பார்ப்பதற்கு கருப்பாகவும், எப்போதும் எண்ணெய் வடிந்திருப்பது போன்று இருக்கும்.
இதனை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அதன் பின்னர் முகத்தில் சுரக்கும் எண்ணெய்யால் முகப்பருக்கள் அதிகமாகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
அப்படியானவர்கள் சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி முகத்தை வீணாக்குவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில், முக அழகை கெடுக்கும் எண்ணெய்யை எப்படி கட்டுக்குள் வைக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய்து வரும் பொழுது சிறந்த பலனை பார்க்கலாம்.
மைசூர் பருப்பு பேக்
- மைசூர் பருப்புடன் ரோஸ் வாட்டர் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- அதன் பின்னர் அதனை நன்றாக அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.
- முகத்தில் சரியாக 15 நிமிடங்கள் வரை வைத்து விட்டு முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
- இந்த பேக்கை வாரத்திற்கு 2 போட்டு வந்தால் எண்ணெய் வடிந்து காணப்படும் முகம் பளபளப்பாக இருக்கும்.
எலுமிச்சை சாறு கலந்த பேக்
- மைசூர் பருப்பை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் தேன், எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக கலந்து விட்டு, முகத்தில் அப்ளை செய்யவும்.
- முகத்தில் சரியாக 10 நிமிடங்கள் வரை காய வைக்கவும். அதன் பின்னர், முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- முகத்தை நன்றாக கழுவி, காட்டன் துணியால் துடைத்து விட்டு மறக்காமல் லைட் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
- இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் இல்லாமல் போகும்.
மஞ்சள் பேக்
- மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக கலந்து பேக் போன்று செய்து கொள்ளவும்.
- இதனை முகத்தில் தடவி சரியாக 10 நிமிடங்கள் வரை காய வைத்து விட்டு, முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.
- இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை போட்டால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அத்துடன் இவ்வளவு நாட்களாக இல்லாத பிரகாசம் இருக்கும்.