மனிதராக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு விடயத்தில் பயம் கண்டிப்பாக இருக்கும். பயம் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.

பயம் நபருக்கு நபர் மாறுப்படும் என்றாலும் நம்மிள் சிலர் பெரிய பெரிய விஷயங்களுக்காக மட்டுமே அஞ்சுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இன்னும் சிலர் எல்லா விடயங்களுக்கும் பயம் கொள்வார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ராசிக்கான பலன்களில் தைரியம் மற்றும் கோழைத்தனம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள். அதே சமயம், சில ராசிகளில் பிறந்தவர்கள் எல்லா விடயங்களுக்கும் பயம் கொள்வார்கள்.

அந்த வகையில், சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பயப்படும் கோழைகளாக இருப்பார்கள் என்னென்ன ராசியில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.      இந்த ராசியினரின் ஆன்மா பலவீனமாக இருக்குமாம்.. நம்பி பொறுப்பு கொடுக்காதீங்க | Which Zodiac Signs Are Most Fearful Person

கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் பயம் கொள்வார்கள். அதிலும் குறிப்பாக சிலந்திகள், எலிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற சின்ன சின்ன உயிரினங்களுக்கு கூட பயம் கொள்வார்கள். பேய்கள் தொடர்பான விஷயங்களில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள். எப்போதும் தனிமையில் இல்லாமல் இருக்க முயற்சிப்பார்கள். மனசோர்வுடன் இருப்பார்கள். 
மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் முட்டாள்களாகவும், சில சமயங்களில் புத்திசாலிகளாகவும் செயல்படுவார்கள். எப்போதும் தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதால் முட்டாள் போன்று நடந்து கொள்வார்கள். பயத்தை எப்போதும் மறைத்தே வைத்திருப்பார்கள். தங்களுக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்கள் கேட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் யாரிடமும் பேசமாட்டார்கள். பலவீனம் வெளியே தெரிந்து விடுமோ என்று எப்போதும் பயப்படுவார்கள்.
விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமானவர்கள் என்று கூறலாம். எந்தவொரு விடயத்தையும் அதிகமாக சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் விடயத்தில் சரியாக இருக்க வேண்டும் என பயம் கொள்வார்கள். சூழ்நிலைகள் சரியாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கற்பனையால் அதனை மோசமாக்குவார்கள். அவர்களின் பிடிவாதத்தால் செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. சரியானவர்களாக இருக்க முயற்சிப்பார்கள். கோழைகளாக வெளியில் காட்டிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனாலும் சில சமயங்களில் தெரிந்து விடயலாம்.