உங்கள் வீட்டில் உள்ள கடிகாரம் நன்றாக வேலைசெய்து கொண்டிருந்து திடீரென நின்று விட்டால் அதை தூக்கி போடுவதற்கு முன்னால் வீட்டில் நடக்கப்போகும் சகுனத்தை தெரிந்துகொண்டு போடுங்கள்.

நம் தினசரி வாழ்க்கையில் கடிகாரங்கள் இல்லாமல் கற்பனை செய்வதே சாத்தியமில்லை. நேரத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் தான், வாழ்க்கை ஒரு ஒழுங்கில் நகர்கிறது.

அதனால்தான், "நேரம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்" என்று பலர் நம்புகிறார்கள். வீட்டில் சரியாக வேலை செய்யும் கடிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதே இதன் மையம்.

ஒழுங்காக வேலை செய்த கடிகாரம் திடீரெ நின்று விட்டதா? வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Well Working Clock Stops Omen Bad Luck House

அவை வெறும் நேரத்தைக் காட்டும் கருவியாக மட்டுமல்ல, வாழ்க்கையில் நேர்த்தியும், சக்தியுமாக பார்க்கப்படுகின்றன.

அதே சமயம், சிலர் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது நின்று போன அல்லது பழுதடைந்த கடிகாரம் உங்கள் வாழ்வில் மோசமான சகுனங்களை உருவாக்கலாம் என ஆன்மிக மூலம் நம்பப்படுகிறது.

கடிகாரங்களை எங்கு வைப்பது சரியானது?

குழந்தைகளின் அறை: ஒரு சுவர் கடிகாரம் குழந்தைகளின் அறையில் நேர்மறை ஆற்றலை உருவாக்கும். நேரத்தின் மதிப்பையும், ஒழுங்கான வாழ்வியலைக் குழந்தைகள் அறிந்து வளர இது உதவும்.

ஒழுங்காக வேலை செய்த கடிகாரம் திடீரெ நின்று விட்டதா? வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Well Working Clock Stops Omen Bad Luck House

வாழ்க்கை அறை, சமையலறை, வீட்டு அலுவலகம்: இந்த இடங்களில் சுவர் கடிகாரங்களை வைப்பது சாதகமானது. நேர மேலாண்மை மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு இது உதவியாக இருக்கும்.

 அலங்காரப் பார்வை: வீட்டில் வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கடிகாரங்களை வைக்க விரும்புபவர்கள், வாழ்க்கை அறையின் சுவரில் அல்லது கேலரி பகுதி போன்ற இடங்களில் அமைக்கலாம்.

வீட்டிற்குள் நுழையும் இடத்தில் நேரடியாக கண்களில் படும் இடத்தில் கடிகாரம் வைக்கக்கூடாது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து எச்சரிக்கிறது.

உலோக கடிகாரங்களை கிழக்கு சுவரில் வைக்க வேண்டாம். இது நேர்மறை ஆற்றலை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஒழுங்காக வேலை செய்த கடிகாரம் திடீரெ நின்று விட்டதா? வீட்டில் நடக்கப்போகும் சகுனம் இதுதான் | Well Working Clock Stops Omen Bad Luck House

 நிறுத்தப்பட்ட, பழுதடைந்த அல்லது உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இவை வீட்டில் எதிர்மறை சக்திகளை ஏற்படுத்தும். மேலும் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

பழைய மற்றும் வேலை செய்யாத கடிகாரங்களை உடனே அகற்றுங்கள். அது மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையிலும் புதிய மாற்றங்களை வரவேற்க தயாராகுங்கள்.