குணம் நன்றாக இருந்தாலும் கிரகங்கள் நன்றாக இல்லாவிட்டால் அவர்களுக்கு துன்பம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

திருமணம் செய்யும் பொழுது ராசி, நட்சத்திரம் கட்டாயம் பார்ப்பார்கள். ஏனெனின் திருமண வாழ்க்கை இருவருக்கும் மகிழ்ச்சியாக அமைய கிரக பலன்களை அவசியம் பார்ப்பார்கள்.

தம்பதிகளின் திருமண வாழ்க்கை ஆரம்பமான பின்னர் பணம், குழந்தைகள், மகிழ்ச்சி, ஆயுள் இவற்றில் ராசி பலன்களும் தாக்கம் செலுத்துகின்றன.

ஜோதிட சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கையில் சில வருடங்கள் சென்றதும் மோசமான விளைவுகள் அதிகமாக இருக்கும். அவ்வளவு மோசமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்த வகையில், திருமணம் செய்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.       

இந்த ராசியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க- வாழ்க்கையே நரகமாகிடும்! | Which Zodiac Signs Gives Worst Results In Marriage

மீனம்- தனுசு மீனம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் குணங்களில் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இவர்கள் திருமணம் செய்தால் கூடிய விரைவில் திருமண பந்தம் முடிவுக்கு வந்து விடும். தனுசு ராசியினர் எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என பேசுவார்கள். அதே சமயம், மீன ராசியில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இரக்கம் கொண்டு செயற்படுவார்கள். இருவருக்கும் போதுமான புரிதல் இல்லாதபட்சத்தில் உறவு சீக்கிரம் முடிவுக்கு வரும்.
மேஷம்- கடகம் மேஷம்- கடகம் ராசிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வர வாய்ப்பு உள்ளது. ஏனெனின் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் அதிபதியாக கொண்டவர்கள். இதனால் இவர்கள் துணிச்சலாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். அதே சமயம், கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். குடும்ப பாசம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாவிட்டால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை நரகமாகி விடும்.  
மிதுனம்- விருச்சிகம்  மிதுனம்- விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள். ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொண்டு, எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களில் மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். குறும்பும், தனித்துவமும் கொண்டவர்களாக இருக்கும் இவர்களுடன் சேர்ந்து வாழும் பொழுது பிரச்சினை அதிகமாக வரும். பொறுமையாக இருப்பது நல்லது.