ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை காதல் வாழ்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் சொகுசாகவும் ஆடம்பரமாகவும் வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி பிறப்பிலேயே அதிர்ஷ்டம் கொண்ட சிறப்பான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அச்சமற்றவர்களாக இருப்பார்கள். வெற்றி பெற ஒரு புதிய பாதை இருந்தால், அவர்கள் வரிசையில், முதலில் இருப்பார்கள்.
அவர்களின் தன்னம்பிக்கை பெரும்பாலும் வாய்ப்புக்கான காந்தமாக செயல்படுகிறது. மக்கள் அந்த துணிச்சலான ஆற்றலால் ஈர்க்கப்படுகிறார்கள்.
இவர்களின் வசீகரம் மற்றவர்களை ஈர்ப்பது போல் இவர்களின் அதிர்ஷ்டம் பணத்தையும், செல்வ செழிப்பையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்துக்கு பஞ்சமின்றி சகல செல்வத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் வசீகர தோற்றம் காணப்படும்.
தன்னம்பிக்கைக்கு பெயர் பெற்ற இவர்கள் எந்த சூழ்நிலையையும் சாமர்தியமாக கையாளும் கலையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் பிறப்பிலேயே அதீத அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பதால், குறைந்த முயற்ச்சியிலேயே நிதி ரீதியில் அசுர வளர்ச்சியடைவார்கள். இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்த நிலையிலும் தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும், ஆடம்பட வாழ்க்கை மீது அதிக பற்று கொண்டவர்களாகவும்,நினைத்ததை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் சிறியளவில் உழைப்பை வழங்கினாலே போதும் இவர்களின் அதிர்ஷ்டம் மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு வெற்றியை கொடுக்கும்.