பொதுவாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.

போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக தலைமுடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல் போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.

தலைமுடி பராமரிப்பதற்கு ஒரு சில  எண்ணெய்கள் கடைகளில் விற்பனை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்தும் பொழுது நாளடைவில் அதிலுள்ள ரசாயனங்கள் வேறு விதமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாக வீட்டு வைத்தியம் உள்ளது. வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டு  எண்ணெய் செய்து பயன்படுத்தினால் எப்பேற்ப்பட்ட தலைமுடி பிரச்சினையையும் சரிச் செய்யலாம்.

2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்- கருஞ்சீரக எண்ணெய் செய்வது எப்படி? | Black Seed Hair Oil For Hair Growth In Tamil

அந்த வகையில், கருஞ்சீரக விதைகளை வைத்து எப்படி தலைமுடி கருகருவென வளர வைக்கலாம் என்பதனையும், அதனை கொண்டு எப்படி  எண்ணெய் தயாரிக்கலாம் என்பதனையும் பதிவில் பார்க்கலாம்.  

நைஜெல்லா சாடிவா தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படும் கருஞ்சீரக விதைகள் எடை இழப்பிற்கு உதவிச் செய்கிறது. கலோஞ்சி விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

இதனை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும். ஏனெனின் தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் ஊட்டசத்துக்கள் அதிகம் இதில் உள்ளது.

2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்- கருஞ்சீரக எண்ணெய் செய்வது எப்படி? | Black Seed Hair Oil For Hair Growth In Tamil

கருஞ்சீரக எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.         

தயாரிக்கும் முறை

  • கருஞ்சீரகம் கொண்டு செய்யப்படும் எண்ணெய்க்கு அரை கப் அளவிலான கருஞ்சீரக விதைகளை எடுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • அதில், 1 கப் அளவு பாதாம், ஆர்கன் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  • இந்த எண்ணெய்யை சுத்தமான போத்தலில் போட்டு சேமித்து வைக்கவும்.
  • வழக்கமாக குளிரான இடத்தில் வைக்காமல் சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
  • விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி விட வேண்டும்.
  • கருஞ்சீரக எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காமல் நேரடியாகவும் உச்சந்தலையில் தடவலாம்.

2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்- கருஞ்சீரக எண்ணெய் செய்வது எப்படி? | Black Seed Hair Oil For Hair Growth In Tamil

  பலன்கள்

1. கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் பொழுது தலைமுடி வளர்ச்சி சுழற்சியை மேம்படுத்தப்பட்டு, புரோஸ்டாக்லாண்டின் D2 போன்ற முடி உதிர்தலுடன் தொடர்புடைய ஹார்மோன் கலவைகள் உற்பத்தியாகும். தலைமுடி பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

2. தலையிலுள்ள அலோபீசியா அரேட்டா போன்ற தன்னுடல் தாக்க அழற்சிகள் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் பொழுது தலையிலுள்ள வீக்கம் குறைவதை பார்க்கலாம்.

2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்- கருஞ்சீரக எண்ணெய் செய்வது எப்படி? | Black Seed Hair Oil For Hair Growth In Tamil

3. கருஞ்சீரக எண்ணெயில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

4. உச்சந்தலையில் மற்றும் கழுத்தில் அதிகப்படியான தோல் செல்கள் வளர காரணமாக தலையில் சிவப்பு திட்டுகள், செதில்களாக தென்படும். இதனை சிலர் பொடுகு என்பார்கள். இன்னும் சிலர் சொரியாசிஸ் என்பார்கள். இப்படியான குணப்படுத்த முடியாத பிரச்சினைகள் கூட குணமாகலாம்.

2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்- கருஞ்சீரக எண்ணெய் செய்வது எப்படி? | Black Seed Hair Oil For Hair Growth In Tamil