இன்று (24.06.2025) ஆனி மாதம் 10‑ஆம் நாள் (விசுவவாசு ஆண்டு), செவ்வாய் கிழமை, திதி - கிருஷ்ண பாக்ஷ தசுர்தசி (இன்று இரவு 6:59 வரை), அதன் பிறகு அமாவாசை.
நட்சத்திரம் மற்றும் யோகம்
நட்சத்திரம்: ரோஹிணி இன்று மதியம் (12:54) வரை, பிறகு மிருகசீரிடம்
யோகம்: சூள யோகம் இன்று காலை 9:36 வரை
அன்றாட அம்ருத யோகம் இன்று காலை 10:01–11:27 வரை
மேஷம் |
வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். தங்கள் கீழ் பணியுரியும் வேலைக்காரர் இது நாள் வரை ஏமாற்றிக் இருந்ததை தாங்கள் கையும் களவுமாக பிடித்துவிடுவீர். |
ரிஷபம் |
குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலில் முதலீடு செய்வீர்கள். |
மிதுனம் |
செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். உத்யோகத்தில் அலுவலகத்தில் இருந்த மந்தநிலை மாறும். பெண்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் தங்கள் கணவர் பூர்த்தி செய்வார். வியாபாரிகளுக்கு பெரும் தொகை கைக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். |
கடகம் |
குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுவீர்கள். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. பணவரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். |
சிம்மம் |
உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். மாணவர்கள் நன்கு படிக்க ஆரம்பிப்பர். |
கன்னி |
தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். பயணத்தின்போது தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். கலைஞர்களின் கனவு நனவாகும். விளையாட்டுத்துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் மிகும். |
துலாம் |
இன்று சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். அது பிரிவினில் முடித்துவிடும். சித்திரை நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். |
விருச்சிகம் |
வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். தங்களுக்கு வெளியூர் செல்லும் திட்டம் உருவாகும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். |
தனுசு |
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். |
மகரம் |
நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். |
கும்பம் |
காதலர்களின் அன்பு பலப்படும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் உண்டாகும். அமைதியை கடைபிடிக்கவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். பெற்றோர்களது கனவை நிறைவேற்றுவீர்கள். |
மீனம் |
விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். சிலர் வீடு, மனை வாங்குவதற்காக இன்று அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுவர். திடீர் பயணம் உற்சாகம் தரும். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். |