ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல்களை நடத்தாமல் ஆளுநர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மூலம் மாகாண சபைகளை நிர்வகிப்பது சட்டபூர்வமானது அல்ல என எஸ்.சி.எஃப்.ஆர் 35/2016 மனு மீதான விசாரணையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அடித்தோடு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் சபாநாயகர், அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து 2018 நவம்பர் முதல் டிசம்பர் வரை நிர்வாகித்த இடைக்கால அரசாங்கத்தில் மாகாண சபைகள் (திருத்தம்) சட்டத்தை 2017 ஆம் ஆண்டில் சில ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மேலும் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் பழைய விதிகளைச் செயல்படுத்துதல். அந்த முன்மொழிவைச் செயல்படுத்துவதன் மூலம், ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் விரைவில் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகிறது என மஹிந்த தேசப்பிரிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இந்த விவகாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.