தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பகுதிகளிலிருந்தும் உயர் தர பரீட்சார்த்திகள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சைக்கு தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.