ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்களாகவும், தங்களின் கருத்து மட்டுமே சரியானது என்று வாதிடும் இயல்பு அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Female Zodiac S Are Most Stubborn

அப்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, பிடிவாதத்தின் மறு உருவமாக திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Female Zodiac S Are Most Stubborn

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் கருத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களின் இலக்கில் குறியாக இருப்பார்கள். தங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எந்தவொரு போட்டியையும் எதிர்கொள்ளத் எப்போதும்  தயாராக இருப்பார்கள். தாங்கள் சொல்வது சரி என்பதை மற்றவர்கள் வியக்கும் வகையில் நிரூபித்து காட்டுவார்கள். 

இயல்பில் இவர்கள் விளையாட்டு குணட் கொண்டவர்கள் போல் தோற்றமளித்தாலும், போட்டி அல்லது விவாதம் என்று வரும் போது அவர்கள் முற்றிலும் எதிர்மறையான நபர்களாக மாறுவார்கள். 

ரிஷபம்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Female Zodiac S Are Most Stubborn

ரிஷப ராசியின் சின்னமாக காளை காணப்படுகின்றது. அதே போல் இந்த ராசியில் பிறந்த பெண்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் இயல்பிலேயே வலிமையானவர்களாகவும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடும் பிடிவாதகாரர்களாக இருப்பார்கள். 

அவர்களின் பிடிவாதமான இயல்பு வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சிக்கல்களையும் பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். அனால் இவர்களின் பிடிவாதத்தில் நிச்சயம் நீதியும் நேர்மையும் இருக்கும். 

கன்னி

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Female Zodiac S Are Most Stubborn

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் பிறவியிலேயே மற்றவர்களை வழிநடத்த கூடியளவுக்கு தலைமைத்தவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பும் பல முறை யோசித்து தெளிவான முடிவை எடுக்கக்கூடியவர்கள். அவர்கள் ஒருமுறை தங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டால், அதற்கு மற்றவர்கள் இணங்னக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்களின் பிடிவாதம் இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமான இருக்கும். இவர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போருடன் மட்டுமே பேச விரும்புவார்கள்.