சுயதனிமைப்படுத்தலுக்காக வீடு திரும்பியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோ ட்டல் ஒன்றிலேயே குறித்த நபர், பணியாற்றிய வந்துள்ளார்.
இதன்போது, குறித்த ஹோட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட ஒருவர், வந்து சென்றமையை அடுத்து, உயிரிழந்த நபர் உட்பட அங்கு பணிப்புரிந்த அனைத்து ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுதலுக்காக வீடு திரும்பியதாக கூறப்படுகின்ற குறித்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.