முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தற்போது கோடை காலத்தில் மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில், மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 

ஆனால் ஒருசிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக்கூடாதாம். அதிகமாக சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்.

உடல் பருமன், வயிற்று வலி, நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரும பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தை கவனமாக சாப்பிட வேண்டும்.

மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? | Who Should Not Eat Mango Side Effects

மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பி வைட்டமின்கள், பொட்டாசியம், தாமிரம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் மாம்பழம், உடலில் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படுவதைக் குறைக்கின்றது.

ஆனால் அதிகமாக சாப்பிடும் போது, இதில் உள்ள கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கின்றது. மேலும் வயிற்று போக்கு மற்றும் வயிறு வலி பிரச்சனையுடன், செரிமானத்தையும் பாதிக்கின்றது.

மாம்பழத்தில் 14 சதவீதம் சர்க்கரை உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

மேலும் சூடான தன்மை கொண்டதால், முகப்பரு மற்றும் கொப்புளங்கள் வருவதுடன், சருமத்தை பாதிக்கவும், செரிமானத்திற்கும் பிரச்சனையை அளிக்கின்றது. மேலும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களையும் இது பாதிக்கின்றது.

மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? | Who Should Not Eat Mango Side Effects

நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், வயிற்றில் கனமாக இருப்பதை போலவும், வாயு தொல்லை இருப்பது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆதலால் இதனை அளவோடு சாப்பிடுவது சிறந்ததாகும்.