பொதுவாக வீடு என்றால் வாஸ்துப்படி அமைந்திருந்தால் தான் அதில் நேர்மறையான ஆற்றல் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வாஸ்து குறிப்புகள் உள்ளன. அவற்றை சரியாக கடைபிடிக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்றாக இருக்கும் சமையலறைக்கு என தனியாக வாஸ்து குறிப்புக்கள் உள்ளன. கிச்சன் ஒழுங்காக அமைக்கப்படவில்லை என்றால் நமக்கு சமைத்து சாப்பிடவே தோணாது. நமது வீடுகளின் வடிவமைப்பு மற்றும் அமைப்பு பொறுத்து வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளன.
கட்டிடக்கலை மற்றும் கட்டுமானத்தின் பண்டைய இந்திய அறிவியலான சில கொள்கைகளை வைத்திருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறை அடுப்பு உட்பட பயன்படுத்தும் சில பொருட்கள் வைப்பதற்கு கூட சாஸ்த்திரங்கள் உள்ளன.
அந்த வகையில், வாஸ்து படி சமையலறை அடுப்பை வைக்க சரியான திசை என்ன? என்பதனையும் அதன் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறை வீட்டின் மிக முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது வாழ்க்கையை நிலைநிறுத்தும் உணவு தயாரிக்கப்படும் இடம். சமைலறையில் உள்ள பொருட்களை வாஸ்துப்படி ஒழுங்கு செய்தால் நேர்மறையான சக்திகள் நிறைந்திருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்திம் படி, சமையலறை அடுப்பை வைத்திருப்பதற்கான சிறந்த திசை தென்கிழக்கு மூலையாகும். இந்த திசையில் நெருப்பு எரிந்தால் நெருப்பின் ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.இது குடும்ப செழிப்பையும் அதிகப்படுத்தும்.
சமையலறையின் வடகிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டாம். ஏனெனின் இந்த திசை நீருடன் தொடர்புப்பட்டிருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, அடுப்பை வடகிழக்கு மூலையில் வைப்பது குடும்பத்தில் மோதல்கள் மற்றும் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதே போன்று அடுப்பை தென்மேற்கு மூலையில் வைப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.