சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும், முறையற்ற பராமரிப்பு காரணமாகவும் பற்கள் மஞ்சளாக இருக்கும்.அதனை எப்படி அகற்றுவது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி இருப்பவர்கள் உங்களின் பற்களை வெள்ளையாக மாற்ற விலையுயர்ந்த சிகிச்சைகள் அவசியமில்லை. மாறாக வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு பற்களை வெள்ளையாக்க முடியும்.

5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் பழத்தின் தோலை பயன்படுத்தி வீட்டிலேயே முத்து போன்ற வெண்மையான பற்களைப் பெறலாம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் பற்கள் கூட முத்து வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.

பல வருடங்களாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் பற்களை வெண்மையாக்கும் ஆற்றல் வாழைப்பழத் தோலூக்கு உள்ளது.

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்! | Banana Peel Remedy To Whiten Teeth

அந்த வகையில் பற்களை வெண்மையாக்க வாழைப்பழத்தோல் எப்படி பயன்படுகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பரபரப்பான வாழ்க்கை முறையில் அதிகாலையில் எழுந்து, சீக்கிரமாக குளித்து, காலை உணவை சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்வது வழக்கமாகி விட்டது. இப்படியான பழக்கங்கள் பலரின் பற்களை மஞ்சளாக்கி விடுகிறது.

பற்களில் உள்ள அழுக்கு பிரச்சனைகளுக்கு சந்தையில் பல ரசாயன பற்பசைகள் விற்பனை செய்யப்படுகிறது.இது போன்ற பொருட்களின் விலை உயர்ந்ததாகவும், ஓரளவுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கலாம்.

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்! | Banana Peel Remedy To Whiten Teeth

எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கையான முறையில் வீடுகளில் கிடைக்கும் வாழைப்பழத் தோலை வைத்து பற்களை வெண்மையாக்கலாம். இது பற்களுக்கு தேவையான ஊட்டசத்துக்களையும் வழங்குகிறது.     

வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் உள்ளன. இவை பற்களின் மேற்பரப்பில் குவிந்துள்ள அழுக்குகளை அகற்றும். இந்த தோல் பற்கள் பளபளப்பாகவும் வெண்மையாகவும் பராமரிக்க உதவுகிறது.

சந்தையில் கிடைக்கும் பல பற்பசைகள் மற்றும் ப்ளீச்சிங் முகவர்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது. மாறாக வாழைப்பழத் தோல் முற்றிலும் இயற்கையானது. இந்த முறையில் சுத்தம் செய்யும் ஒருவரின் பற்களின் மேல் அடுக்கை சேதப்படுத்தாமல் பற்களை வெண்மையாக்கப்படும்.

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்! | Banana Peel Remedy To Whiten Teeth

  • அளவாக பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை தனியாக உரித்து எடுக்கவும்.
  • தோலின் வெள்ளை நிற உட்புறப் பகுதியை உங்கள் பற்களில் 2-3 நிமிடங்கள் மெதுவாகத் தேய்க்கவும்.
  • அதன் பின்னர் சுமாராக 5 நிமிடங்கள் விட்டுவிட்டு, சாதாரண பற்பசையால் மீண்டும் பற்களை துலக்க வேண்டும்.
  • இந்த செயல்முறையை தினமும் செய்வதன் மூலம், சில வாரங்களுக்குள் பற்களின் மஞ்சள் நிறம் குறைந்து வெண்மையாக்கப்படும்.  

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்! | Banana Peel Remedy To Whiten Teeth

பலன்கள்

1. வாழைப்பழத் தோலில் உள்ள தாதுக்கள் ஈறுகளை வலுப்படுத்தி, பற்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை இருந்து பெற்றுக் கொள்ளலாம். அதே வேளையில் இயற்கையான பளபளப்பை அதிகரிக்கும் ஆற்றலும் உள்ளன.

2. வாழைப்பழத் தோல் வாயிலிருந்து பாக்டீரியாக்களை நீக்க உதவியாக இருக்கும். சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். அதனை நீக்கி, ஆரோக்கியமான பேச்சை வாழைப்பழத் தோல் கொடுக்கிறது.  

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்! | Banana Peel Remedy To Whiten Teeth