அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு அட்சய திருதியை சுப தினம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அட்சய திருதிகை நாளில் மீனராசியில் சுக்கிர பகவான் அமர்ந்து உச்ச பலனை கொடுக்கின்றார். அவருடன் புதன் இணைந்து லட்சுஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக்கவுள்ளது.அதனால் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமாக அமையும். முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
நிதி நன்மைகளும், நீண்ட நாள் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியும் செழிப்பும் அதிக்கும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.செல்வ செழிப்பு அதிகரிக்க அரிசி தானம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த அட்சய திருதிகை பொருளாதாரத்தில் எதிர்பாரதளவுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் அகன்று புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். இந்த நாளில் வெள்ளி நகை வாங்குவது அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.
மகரம்
மகர ராசியினருக்கு அட்சய திருதியை பண்டிகை நாளில் உருவாகக்கூடிய யோகங்களால் அமோக பலன்கள் கிடைக்கும்.
தொழில் புரிவோருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன் வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
சனி பகவானின் ஆசியால், லட்சுமி நாராயண ராஜ யோகத்தின் மூலமாக வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
கும்பம்
குடும்ப ராசியினரின் நீண்ட நாள் துன்பம் இந்த அட்சய திருதியை நாளில் உருவாக்கக்கூடிய லட்சுமி நாராயணா யோகத்தால் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடிவரும் புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கும் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
அந்த நாளில் இவர்கள் லட்சுமி தேவிக்கு தாமரை மாலை அணிவித்து வழிப்படுவது அற்புத பலக்களை கொடுக்கும்.