வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என யாரும் இருக்கமாட்டார். மாறாக தவறு செய்து விட்டால் அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வரும் பொழுது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அப்போது இனி வரும் காலங்களில் தவறுகள் செய்யாமல் நிம்மதியான வாழ்க்கை வாழலாம். ஆனால் எமக்கு தெரிந்த சிலர் எக்காரணம் கொண்டும் செய்த தவறை ஒப்பு கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் அந்த தவறை செய்தது சரி என்பது போன்று வாதிடுவார்கள்.

அவர்களின் பிடிவாதம் எந்த சூழ்நிலையிலும் அவர்களை பின்வாங்கவோ, மன்னிப்பு கேட்கவோ அனுமதிக்காது. இப்படியான குணங்கள் பெண்களுக்கு இருந்தால் அது குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளுக்கு இவர்களே முக்கிய காரணமாகவும் இருப்பார்கள். 

ஜோதிடத்தின் படி, ஒருவரின் குணத்தில் ராசிகளும், அவர்கள் பிறந்த நேரமும் தாக்கம் செலுத்துகின்றன.

அப்படியாயின், எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த மோசமான பிடிவாதத்திற்கு சொந்தக்காரராக இருப்பார்கள் என பதிவில் பார்க்கலாம்.    

பெண்கள் பிறக்கக் கூடாத ராசிகள்- ஜோதிடம் என்ன சொல்கிறது? | Which Zodiac Signs Who Struggle To Apologize

மேஷம்
  • மேஷ ராசியில் பிறந்தவர்கள் மற்ற ராசிகளை விட பிடிவாதம் மற்றும் தற்பெருமைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • எவ்வளவு தவறுகள் செய்தாலும், அதனை ஆதாரங்களுடன் காட்டினாலும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
  • மன்னிப்பு கேட்பது அவர்களின் பலவீனமாக உணர்வார்கள்.
  • அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது பழியை மற்றவர்களின் மீது சுமத்தவோ வழிகள் தேடுவார்கள்.
  • ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். 
ரிஷபம்
  • ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மன உறுதியுடன் இருப்பார்கள்.
  • பிடிவாதம் அதிகமாக இருக்கும். செய்த தவறை தற்காப்புக்காக மறைப்பார்கள்.
  • மற்றவர்களிடம் வாக்குவாதம் கொண்டு அவர்களை அவர்களே தாழ்த்திக் கொள்வார்கள்.
  • ஒருவேளை அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அது உண்மையானதாக இருக்காது.
  • அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விட அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் நபர் என்பதனை தெரிந்திருக்கமாட்டார்கள். இதுவே உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.
 சிம்மம்
  • சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமும், தற்பெருமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • தவறை ஏற்றுக் கொள்ளும் மனம் இவர்களிடம் இருக்காது.
  • பெருமையை இழப்பதையோ அல்லது தவறு செய்தவர்களாக தோன்றுவதையோ வெறுக்கிறார்கள்.
  • இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை மறுக்கிறார்கள்.
  • மற்றவர்களுடன் ஆழமான, அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதை சவாலாக மாற்றும்.