இந்து மத பாராம்பரியத்தின் பிரகாரம் எந்த ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு சாஸ்திரமாக பார்க்கப்படுகின்றது.

இந்து புராணங்களில் தேங்காய் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் மற்றும் புத்த தத்துவ கதைகள் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தேங்காய் "கடவுளின் பழம்" என்று கருதப்படுகிறது.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

இந்து மதத்தில், கடவுளை, குறிப்பாக இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் (சிவன்) ஆகியோரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரே பழம் இது.

விஷ்ணு பூமிக்கு இறங்கியபோது, ​​மனிதகுலத்தின் நலனுக்காக லட்சுமி தேவி, ஒரு தேங்காய் மரம் மற்றும் காமதேனு பசுவை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

மேலும், தேங்காயின் கூறுகள் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டுள்ளன: வெள்ளை தானியம் தேவி பார்வதியைக் குறிக்கிறது, தேங்காய் நீர் புனித கங்கை நதியுடன் தொடர்புடையது, மற்றும் பழுப்பு நிற ஓடு கார்த்திகேயரை குறிக்கிறது.  

இந்து கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களில் தேங்காய் உடைக்கும் சடங்கு மிகவும் முக்கியமானது.

இது நம்பிக்கை, ஜோதிடம் மற்றும் மதத்துடன் தொடர்புடையது. பூஜையின் போது செய்தாலும், ஒரு புதிய முயற்சியின் தொடக்கத்திலோ அல்லது ஒரு முக்கியமான நிகழ்விற்கு முன் செய்தாலும், தேங்காய் உடைப்பது ஆசீர்வாதங்களைத் தரும், தடைகளை நீக்கும் மற்றும் செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

சிதறுகாய் உடைப்பது  நிவேதனம் செய்யும் நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம். இறைவன் பார்வைபட்ட பொருளைப் பலருக்கு அளிக்கிறேன் என்பதே அதன் தாத்பர்யமாகும்.

இந்து மத தத்துவங்களின் அடிப்படையில் ‘சிதறு தேங்காய் உடைவதைப் போல நம் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது’ என்று நம்பப்படுகின்றது.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

அதுமட்டுமன்றி, சிதறு தேங்காய் சிதறுவது போன்று நம் துன்பங்களும் தடைகளும் தோஷங்களும் விநாயகர் அருளால் சிதறிப்போகும் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.

தேங்காய் உடையும் போது வெண்மையான பகுதி வெளிவருது போல், இறைவன் சன்னதியில் நம்மிடமிருக்கும் நான் என்ற அகந்தை அழியும் போது நமது ஆன்மா தூய்மையடைகின்றது. இதனை உணர்த்துவதே சிதறு தேங்காய் போடுவதன் தத்துவமாகும்.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

நினைத்த காரியம் அல்லது செல்லும் காரியம் தடை இன்றி வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால், தடைகளை தகர்த்தெரிய வழிப் பிள்ளையாருக்கு ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தொழிலில் முன்னேற்றமடைய வேண்டும் என நினைப்பவர்களும் என்று நினைப்பவர்களும், நோயால் வாடுபவர்களும், மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைப்பது நல்லது.

தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமானது? சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? | Why Breaking Coconut Ritual Is Significant

கல்வியில் உயர்வடைய வேண்டும் என்றால், ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சிதறு தேங்காய்களை உடைப்பது சிறந்த பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை வழிபடுவது சிறப்பு.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தைகளை பெற்று மகிழ வேண்டும். பெற புதன் கிழமையில் தொடர்ந்து 9 வாரங்களாக 9 தேங்காயை உடைத்து பிள்ளையாரை வழி பட்டால் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஐதீகம். 

பிள்ளையாருக்கு 11 சிதறு தேங்காய் உடைத்தால், நேரத்திகடன் செய்ய, தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் காணப்படுகின்றது.