2025 ஆம் ஆண்டுக்கான செவ்வாய் பெயர்ச்சியானது மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் கிரகம், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை அன்று, கடக ராசியில் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரக பெயர்ச்சியினால் வாழ்க்கையில் சிக்கல்களையும் சோதனைகளையும் சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்நிலையில் மேஷ ராசியினர், உறவுகள் பாதிக்கப்படுவதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வாகனம் சொத்து சம்பந்தமான தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீரென அதிகரிக்கும் செலவுகள் மன உளைச்சலை கொடுக்கும்.
கடக ராசி
கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இவர்களுக்கு நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. மனச்சோர்வு ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.
துலாம் ராசி
துலாம் ராசியினருக்கு செவ்வாயின் பெயர்ச்சி வேலையில் தொழிலில் பிரச்சனைகளை உண்டாக்கும். சக பணியாளர்களால் சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நிதிநிலை பாதிக்கப்படலாம். நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம்.
மகர ராசி
மகர ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியினால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல்நல பிரச்சனைகள் வாடலாம். குறிப்பாக ரத்த அழுத்தம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.
கும்ப ராசி
கும்ப ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி காரணமாக வீட்டில் தேவையில்லாத சண்டைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நல பிரச்சனைகள் மன உளைச்சலை கொடுக்கும். ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்திலும் சாதகமான நிலை இருக்காது.