நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் மார்ச் 2ஆம் திகதி முதல் மீன ராசியில் வக்ரகதியில் பயணிக்க உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சி சுமார் 90 நாட்கள் நீடிக்கும்.

சுக்கிரனின் வக்கிர பெயர்ச்சி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodic Get Money Due To Sukran Transit

சுக்கிரன் மார்ச் 2 ஆம் தேதி காலை 6:04 மணிக்கு வக்ரகதியில் பயணிக்க தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி நேர்கதியில் திரும்புவார்.

இந்நிலையில், சுக்கிரனின் இந்த வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வெற்றி, நிதி நிலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

துலாம்

உங்கள் ராசிக்கும் சுக்கிரன் பெயர்ச்சி நிதி ஆதாயம், வேலையில் முன்னேற்றம், வாழ்க்கைத் துணையின் ஆதரவை கொடுக்கும்.

மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சியால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு, தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு பொருள் சேர்க்கை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வணிகத்தில் லாபம், வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசியினருக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன், புதிய வாகனம் வாங்கும் யோகம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.