பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது.
இதன்படி, பிறந்திருக்கும் புத்தாண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கவுள்ளது.
அத்துடன் சிலர், ராசிகள் கிரக பெயர்ச்சிகள் காரணமாக பல யோகங்களை பெறவுள்ளனர் என்றும் ஜோதிடம் கூறுகிறது.
அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம்.
1. மேஷம்
- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிர்ஷ்டத்தால் இந்த ஆண்டு ஜொலிப்பார்கள்.
- கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் அனைத்தும் இந்த வருடம் நிறைவேறும்.
- செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். உயர்கல்வி தொடர்பில் பல குழப்பங்கள் ஏற்படும். இதனால் சற்று நிதானமாக செயற்படுவது அவசியம்.
- எதிர்பாராத சில பண உதவிகளை பெற்றுக் கொள்ளும் ராசியாக நீங்கள் பார்க்கப்படுவீர்கள்.
- சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும்.
- பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகமாக இருப்பதால் தீர்க்கமான முடிவெடுப்பீர்கள்.
2. ரிஷபம்
- ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உத்தியோக பணிகளில் ஏற்றம் ஏற்படும்.
- நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும்.
- பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும்.
- நிதி தொடர்பான நெருக்கடிகள் குறைந்து ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்.
- வாகனப் பயணங்களில் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
- மூத்த உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
- புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்களை பெற்று வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வீர்கள்.
3. மிதுனம்
- மிதுன ராசியில் பிறந்தவர்கள் நெருக்கமானவர்களிடம் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொள்வீர்கள்.
- ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இதனால் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
- எதையும் ஆராய்ந்து செயற்படும் குணம் உங்களிடம் இருக்கும்.
- எப்போதும் நன்றாக யோசித்து சாதுரியமாக செயல்படும் எண்ணம் உங்களிடம் இருக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும்.
- உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும் ஆண்டாக இந்த வருடம் பார்க்கப்படுகின்றது.