நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று 788 பேருக்கு கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், வள்ளியூர், களக்காடு, அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


மாநகரில் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 7 வயது சிறுவனும் அடங்குவர். மற்றொருவர் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 737 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8 பேர் குணமடைந்தனர். இதுவரை 14 ஆயிரத்து 471 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 216 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.