வறுக்கும் போது அதன் சுவை மாறாமல் இன்னும் சுவையாக வறுக்க வேண்டும். மீனில் வைட்டமின்களும் கொழுப்பு புரதம் போன்ற சத்துக்கள் இருக்கின்றது.

இதை பல வகை மசாலா கொண்டு வறுக்கலாம். ஆனால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்ட மசாலா செய்முறை மீனின் சுவையையும் வாசனையும் அதிகரிக்கிறது. இந்த பதிவில் அது பற்றிய முழு விபரத்தையும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வர மிளகாய் – 10
  • வரமல்லி – 2 ஸ்பூன்
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • மிளகு – ஒரு ஸ்பூன்
  • வெந்தயம் – அரை ஸ்பூன்
  • எண்ணெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், வர மிளகாய், வரமல்லி, சீரகம், மிளகு, வெந்தயம் என அனைத்தையும் தனித்தனியான வறுக்கவேண்டும்.

மீன் வறுவலுக்கு இப்படி பொடி செய்தால் மட்டுமே சுவை அள்ளும்! ரெசிபி இதோ | Food Spice Powder Is Fish Fry The Aromaஒன்றாக அனைத்தையும் சேர்த்து வறுக்கக்கூடாது. தனித்தனியாகத்தான் வறுக்கவேண்டும். ஒன்றாக வறுத்தால் அனைத்தும் சரியான அளவில் வறுபடாது.

அனைத்தையும் தனித்தனியாக நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

மீன் வறுவலுக்கு இப்படி பொடி செய்தால் மட்டுமே சுவை அள்ளும்! ரெசிபி இதோ | Food Spice Powder Is Fish Fry The Aroma

அது ஆறியவுடன், அதை ஒரு ஏர் டைட் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். மீன் மசாலாப்பொடி தயார். நீங்கள் இதை எந்த மீன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.