ஜோதிட சாஸ்திரத்தின்படி 2025 ஜனவரி முதல் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ராசி மாற்றம் செய்யப்போகின்றன.
இதன்படி டிசம்பர் 4-ல் தனுசு ராசியில் முதலில் சஞ்சரித்து, ஜனவரி 18-ல் தனுசு ராசியில் மறைந்து விடுவார். ஜனவரி 14 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைவார்.
சூரியனுக்குப் பிறகு, செவ்வாய் ஜனவரி 21 அன்று மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இதன் பின்னர் 24 திகதி புதன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குச் செல்வார்.
அங்கு சூரியனுடன் புதன் இணைவார். பின்னர் மாத இறுதியில் சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசிக்குள் நுழைவார். இந்த மாற்றமானது சில ராசிகளுக்கு அதோக வெற்றியை தரப்போகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி |
- கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டின் ஜனவரி தாம் புதிய வாய்ப்புக்களுக்காக அமையும்.
- நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகளை பெறலாம்.
- இதுவரை வேலை இல்லாத நபர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகப் பணம் செலவழிக்க நேரிடும்.
- இருப்பினும் வருதானம் அதிகமாகும்.
- குடும்பத்தினரின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள்.
- பணத்தை சேமிப்பீர்கள்.
|
மீனம் |
- உங்கள் ராசிக்கு மங்களகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் சூழ்நிலை அமையும்.
- மாதத்தின் ஆரம்பத்தில் செல்வாக்கு நபரை சந்திப்பீர்கள்.
- இந்த நபரால் எதிர்காலத்தில் பெரிய லாபத்திற்கு வழிவகுக்கும்.
- இதனால் நீங்கள் சொத்து விஷயத்தில் பலன் பெறுவீர்கள்.
- நீங்கள் இதுவரை செய்த முயற்ச்சி முழுமையான பலன் தரும்.
- முடிந்தவரை உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
|
கடகம் |
- ஜனவரி மாதத்தில் உங்களுக்கு நேரத்தையும் சக்தியையும் சரியாக நிர்வகிப்பது நல்லது.
- வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
- இதுவரை இருந்த பிரச்சனைகள் இரண்டாம் வாரத்தில் குறைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
- காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கு சம்மதம் தெருவிக்கலாம்.
|