ராஜாக்களின் அரிசி என அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியை பண்டைய காலங்களில் ராஜாக்களும் ராஜகுடும்பத்தினரும் மட்டும் தான் சாப்பிட்டார்களாம். 

அந்த அரிசியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து சாதாரண மக்களும் அறிந்துக்கொண்டு இதனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் இந்த கருப்பு கவுனி அரிசியை தடை செய்தாக இதன் வரலாறு குறிப்பிடுகின்றது. 

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த கருப்பு கவுனி அரிசி பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது. 

குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என நினைப்பவர்களக்கும கருப்பு கவுனி அரிசி ஒரு வாப்பிரசாதம் என்றே கூற வேண்டும். தினசரி சாப்பிட்டுவர 30 நாட்களில் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

இதில் காணப்படும் அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கொடுக்கின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசியை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு பொங்கல் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி - 200 கிராம்

 தண்ணீர் - 2 டம்ளர் 

நெய் - 2 தே.கரண்டி 

பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்

உப்பு - சுவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2 

நெய் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி

தாளிப்பதற்கு தேவையானவை

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

நெய் - 2 தே.கரண்டி

இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

மிளகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

முந்திரி - 15 

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

செய்முறை

முதலில் கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு,அரிசி முழுமையாக மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும். 

அதனையடுத்து அரிசியில் உள்ள தண்ணீரை  வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Lossபின்னர் பாசிப்பருப்பையும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 30 நிமிடங்கள் வரையில்  ஊற வைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு ஒரு குக்கரை  வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை மட்டும் சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஊற வைத்துள்ள கவுனி அரிசியையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட  வேண்டும். 

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

பின்னர் அரிசி ஊற வைத்த நீரை யும் அதில் ஊற்றி, அத்துடன் 2 டம்ளர் நீரை மேலும் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

அதனையடுத்து பச்சை மிளகாய், நெய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கிளறி, வேகவிட வேண்டும். 

கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை முடி, அடுப்பை மிதமாக தீயில் வைத்து, 7-8 விசில் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்... எப்படி செய்வது? | Kavuni Rice Ven Pongal For Weight Loss

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து மிளகு, சீரகம் சேர்த்து பொரிய விட்டு முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரையில் வருத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  கருப்பு கவுனி அரிசி பொங்கல் தயார்.