எண் கணணித சாஸ்திரம் தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் சொலுத்துகின்றது.

இந்த திகதிளில் பிறந்தவர்கள் சாதிப்பதற்காகவே பிறவி எடுத்தவர்களாம்... உங்க திகதி என்ன? | What Is The Most Successful Date Of Birthஎண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் உயுதியாக நம்புகின்றது. 

இந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்கையில் சாதிப்பதற்காவே பிறப்பெடுத்தவர்களாம். அப்படிப்பட அதிர்ஷ்டம் நிறைந்த திகதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

7 ஆம் திகதி 

இந்த திகதிளில் பிறந்தவர்கள் சாதிப்பதற்காகவே பிறவி எடுத்தவர்களாம்... உங்க திகதி என்ன? | What Is The Most Successful Date Of Birth

12 மாதங்களில் எந்த மாதமாக இருந்தாலும் 7 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் ஆழ்மனம் சொல்வதை மட்டுமே கேட்பார்கள். 

இவர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

மற்றவர்களுக்கு ஒருபோதும் இவர்கள் கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். தலைமைத்துவ பண்புகள் இவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். 

இவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் போன்ற தனித்துவமான குணங்களால் வாழ்வில் நிச்சயம் பெரிய விடயங்களை சாதிப்பார்கள். 

16 ஆம் திகதி 

இந்த திகதிளில் பிறந்தவர்கள் சாதிப்பதற்காகவே பிறவி எடுத்தவர்களாம்... உங்க திகதி என்ன? | What Is The Most Successful Date Of Birth

அனைத்து மாதத்திலும் 16 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அமைதியானவர்களாகவும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களுக்கு கற்றல் ஆர்வம் அதிகமாக இருக்கும்.கண்களில் படுகின்ற அனைத்து விடயங்களையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். 

இவர்களின் ஆராய்ச்சி, படைப்பு வேலை அல்லது கலை ஆர்வம் என்பவற்றில் ஏதாவது ஒன்றில் நிச்சயம் சாதிப்பார்கள். இவர்கள் பிரபல்யம் அடையும் வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் நெருங்கி நண்பர்களுடன் அல்லது உறவுகளுடன் மாத்திரமே உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். 

25 ஆம் திகதி 

இந்த திகதிளில் பிறந்தவர்கள் சாதிப்பதற்காகவே பிறவி எடுத்தவர்களாம்... உங்க திகதி என்ன? | What Is The Most Successful Date Of Birth

அனைத்து மாதத்திலும் 25 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மற்றும் மன வலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் புதிய விடயங்களை தேடி கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாகவும் இயல்பாகவே நுண்ணறிவு உடையவர்களாகவும் இருப்பார்கள். 

எந்த சூழலிலும் தனித்து இயங்க நினைக்கும் இவர்கள் வாழ்வில் அதிக போராட்டங்களை சந்திக்கின்ற போதிலும் லட்சிய பாதையில் இருந்து பின்வாங்குவது கிடையாது.