பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் மற்றும் முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள், வெந்தயம், கற்றாழை இன்னும் சில பொருள்களைக் கொண்டு கை வைத்தியம் செய்யலாம்.
இதனால் தலைமுடி பிரச்சினைகள் கட்டுக்குள் வந்து, தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
தற்போது பெண்களின் பெரும் பிரச்சினையாக காணப்படும் தலைமுடி உதிர்வை கட்டுப்படுவதற்கு என்னென்ன கை வைத்தியங்களை செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
- நீர் அல்லது சாதம் வடித்த நீர்- தேவையான அளவு
- கற்றாழை ஜெல்- 1 டேபிள் ஸ்பூன்
- செம்பருத்தி பூ
- செம்பருத்தி இலைகள்
- தயிர்
- வேப்பிலை
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில் தேவையான வெந்தயத்தை எடுத்து இரவில் ஊற வைக்கவும். நீர் இல்லாவிட்டால் சாதம் வடித்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அத்துடன் கொஞ்சமாக கற்றாழையின் ஜெல்லை நன்றாக கழுவி விட்டு சேர்க்கவும்.
இதனை தொடர்ந்து செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள், தயிர், வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
இந்த பேக்கை தலையில் போட்டு சுமாராக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தலையில் நன்றாக ஊற வைக்கவும். பின்னர் சுத்தமான நீரில் தலையை கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
முக்கிய குறிப்பு
ஏதாவது ஒவ்வாமை இருந்தால் உரிய மருத்துவரை பார்க்க வேண்டும்.