இந்து மதத்தில் குறிப்பிட்டதன்படி குறிப்பிட ஐந்து இடங்களுக்கு செல்லும் போது வெறும்கை கொண்டு செல்ல கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் | இந்துக்களின் நம்பிக்கைப்படி கோவிலுக்கு செல்லும் போது வெறும் கையுடன் செல்ல கூடாது என கூறப்பட்டுள்ளது. கையில் எதாவது கடவுளுக்காக எடுத்து செல்ல வேண்டும். அது சாதாரண பூவாக இருந்தாலும் பரவாயில்லை என கூறப்பட்டுள்ளது. |
குரு | உங்களை கற்பித்த குருவை நீங்கள் வெகுநாட்களுக்கு பின்னர் பார்க்கப்போகிறீர்கள் என்றால் அவர்களுக்கு உங்களால் முடிந்த பரிசை எடுத்து செல்வது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. அது குறைந்த விலைமதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. |
ககோதரி வீடு | உங்களுடன் பிறந்து வளந்த சகோதரி திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். இப்போது நீங்கள் அவரை பார்க்க செல்கீறீர்கள் என்றால் அவருக்கு ஏதாவது உங்களால் முடிந்ததை வாங்கி செல்ல வேண்டும். இது உங்களுக்கு பல வழிகளில் அதிஷடத்தை கொடுக்கும். |
மகள் வீடு |
நீங்கள் மகளை பெற்ற பெற்றோர்கள் என்றால் அவரை வெகு நாட்களின் பின்னர் பார்க்க செல்லும் போது வாழைப்பழங்கள் வாங்கிச் செல்ல வேண்டுமாம். இப்படி செய்தால் மகளின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. |
நண்பன் வீடு | வெகு நாட்களின் பின்னர் உங்கள் நண்பனை பார்க்க செல்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு இனிப்புக்கள் வாங்கி செல்ல வேண்டும். |