ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தலைமைத்துவம் மரியாதை மற்றும் உயர் பதவி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படும் சூரிய பகவான் பார்க்கப்படுகின்றார். இவர் நவ கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார்.
ஒருவருடைய ராசியில் சூரிய பகவானின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் நிலையைப் பொருத்து ஒருவரின் செல்வாக்கு, கலைத்திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
ஜோதிடக் கணிப்பின் அடிப்படையில் சூரியன் ஒரு மாத காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி சூரிய பெயர்ச்சியாக விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சூரிய பகவான் இடமாற்றம் அடைவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் அதிர்ஷ்டகரமாக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அப்படி வாழ்வில் சாதக மாற்றங்களை பெறப்போதும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
2024 ஆம் ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு பல்வேறு வகையிலும் வெற்றிக்கான வாய்ப்புகளை கொடுக்கப்போகின்றது.
அதன் தாக்கம் வருகின்ற புத்தாண்டை அதிர்ஷ்டம் மிக்கதாக மாற்றப்போகின்றது. தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அடுத்த ஆண்டில் பதவி உயர்வுடன் வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்சி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு, தனுசு ராசியில் சூரியனின் பயணம் அமோகமாக அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இலக்கின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
பணவரவு திருப்தியளிக்கக்கூடியதாக இருக்கும்.தன்னம்பிக்கை மேம்படும்.வரப்போகும் ஆண்டில், தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
குடும்ப உறவுகளிடைய இணக்கமான சூழல் உருவாகும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கன்னி
சூரியனின் இந்த ராசி மாற்றமானது கன்னி ராசியினருக்கு வாழ்வில் பல்வேறு நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.
இலக்குகளை அடைவதற்கு சரியான பாதையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமையும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.