ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நியாயத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.
அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கம் அதிகமாக இருக்கின்றது. தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான் 2025 மார்ச் மாதம் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி காலம் நல்ல காலமாக இருக்கும். சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள் சமூகத்தில் கௌரவம் மரியாதையும் அதிகரிக்கும். நடக்காமல் இருந்த பல பணிகள் நடந்துமுடியும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது
மிதுனம்
மீனத்தில் சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். பொருளாதார நிலை வலுவடையும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனியின் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். தொழில் விருத்தி அடையும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வும் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சனி பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.
மகரம்
சனிப் பெயர்ச்சி மகர ராசிகளுக்கு சுபமானதாக அமையும். இவர்களுக்கு ஏழரை சனி முடிவடையும். ஆகையால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி காலத்தில் சாதகமான மாற்றங்கள் தென்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சனிபகவானின் அருளால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.