திருமணமான பெண்கள் காலில் மெட்டி எவ்வாறு அணிய வேண்டும் என்பதை அதனால் என்னென்ன அதிர்ஷ்டம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு கால் விரல்களில் மெட்டி அணிவதால் பல மருத்துவ பயன்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெள்ளியில் அணியப்படும் இந்த மெட்டியானது கால் நரம்புகளில் தூண்டுதலைக் கொடுத்து கர்ப்பப்பையில் இணையும் நரம்புகள் வழியே கருப்பையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைப்பதுடன், மாதவிடமாய் சீராக வருவதற்கு உதவுகின்றது.

உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தை குறைப்பதுடன், கருப்பை பிரச்சனையையும் தடுக்கின்றது. வெள்ளி சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் என்பதால் பெண்கள் இதனை அணிந்து வந்தால் சுகபோக வாழ்க்கையை வெறுவார்களாம்.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம் | Women Wear Metti For Good Luckஇரண்டு வளையங்கள் கொண்ட மெட்டி அணிவது வழக்கமாகும். அவ்வாறு நீங்கள் மெட்டி அணியும் கால் நகத்திற்கு மேலே முட்டிக்கு கீழேயும் தங்கியிருக்க வேண்டும். மெட்டி அதற்கு கீழே செல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெண்கள் நடக்கும்போது மெட்டி கீழே உரச வேண்டுமாம்.

தேய்ந்து பொன மெட்டியை காலில் போடுவது கூடாது. வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மெட்டியை மாற்றிவிட வேண்டும். அவ்வாறு தேய்ந்த மெட்டியை போட்டால் வீட்டில் ஒற்றுமை மற்றும் பொருளாதாரம் தேய்ந்து கொண்டு செல்லுமாம்.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம் | Women Wear Metti For Good Luck

வெள்ளியில் இல்லாமல் வேறு உலோகங்களில் அணியக்கூடாது. கட்டை விரலுக்கு அடுத்த மூன்று விரலுக்கும் மெட்டி அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால் கணவனுக்கு தொழிலில் நஷ்டம் மற்றும் உடல்நல பிரச்சனை ஏற்படும்.

ஆதலால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். பெண்கள் மெட்டியை எப்போதும் கழட்டி வைக்கக்கூடாது.

நடக்கும்போது தரையில் மெட்டி எழுப்பும் ஓசை குடும்பத்தில் சுபிட்சத்தைத் தரும். இது ஒரு இனிய மங்கல ஒலியாகும்.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம் | Women Wear Metti For Good Luck