ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருபகவான் ஞானம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில், படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதற்கு உதவிச் செய்யும் ஒரே கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகின்றார்.

வியாழன் அருள் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுத்தாலும் வாழ்க்கையில் சில எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி விடும்.

இதன்படி, குருபகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நிலைபெற்று சஞ்சரித்து வருகிறார். அதே சமயம், வியாழனும் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் விளைவாக எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் செல்வம் பெருகி நிதி வரவு அதிகமாகும்.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

குரு நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்- உங்க ராசி இருக்கா? | Jupiter Transit In Rohini Lucky Nakshatra 2025

கடகம் கடக ராசியில் பிறந்தவர்கள் அடுத்த வருடம் அறிவால் பிரகாசிப்பார்கள். புதிய விடயங்கள் கற்றுக் கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். இவை அனைத்தும் வெற்றிகரமான ஒரு புதிய வேலையில் சேர உதவும். இந்த முயற்சி உங்கள் வாழ்க்கையில் புதிய வருமானத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் பணக்கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்வீர்கள்.
மீனம் மீன ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிலும் குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் பணிபுரிபவர்கள் கண்டுபிடிப்புகளில் தீவிரமாக இருப்பார்கள். வங்கியில் கடன் வாங்கியிருந்தால் எப்போது அடைக்காலம் என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக எதிர்பாராத நிதி லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் புதிய நபர்களுடன் நட்பு கொள்ளும் சந்தர்ப்பம் வரும். இதன் விளைவாக சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகமாகும். வருமானமும் அதிகரிக்கலாம். 
மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆண்டு ஞானம் அதிகரித்தவர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள். குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிகமாக கவனம் கொள்வீர்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் தொழில் உங்களுக்கு வருமானத்தைக் கொடுப்பதுடன் உங்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.