ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளதாக தொன்று தொற்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அடுத்த ஆண்டில் புதிய வீடு வாங்கும் யோகம் காணப்படுகின்றது.
அப்படி 2025 ஆம் ஆண்டில் ராஜயோகத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களக்கு 2025 ஆம் ஆண்டு வாழ்வில் பல்வேறு நல்ல திருப்பங்கள் நிறைந்த மகிழ்சிகரமான ஆண்டாக அமையும்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கொண்டிருந்த நீண்ட நாள் லட்சியம் இந்த ஆண்டில் நிறைவேறுவதற்காக யோகம் கூடிவரும்.
நிதி ரீதியில் இந்த ஆண்டில் எதிர்ப்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும்.நினைத்ததை விடவும் அதிகமான வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த ராசியினர் புதிய வீட்டில் குடியேறும் வாய்ப்பை பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தப்போகும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையப்போகின்றது.
தற்போது சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் புதிய வீடு வாங்கும் அதிர்ஷ்டம் அமையப்போகின்றது. அல்லது வீட்டை புதுப்பிக்கும் அளவுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தொழில் விடயங்களில் புதிய முயற்சிகளால், அதிக லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களக்கு 2025 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடனேயே அதிர்ஷ்டகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.
வீட்டுக்கடன் பெற அல்லது பரம்பரை சொத்துக்களின் உதவியால் புதிய வீட்டை வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.
இவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதும் சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிள்றது. இந்த ஆண்டில் இவர்கள் நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்பார்கள்.