2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அடுத்த வருடம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை தொடர்ந்து புது வருடம் யாருக்கு எப்படி அமைய போகின்றது என்பதனை ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த வகையில் புதிய ஆண்டு 2025 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்க போகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் தொடர்புடைய போராளிகள் கடந்த வாரம் இந்த தாக்குதலை ஆரம்பி விட்டதாக கூறப்படுகின்றது. கடந்த கடந்த 12 ஆண்டுகளில் இப்போது தான் கிளர்ச்சியாளர்கள் குழு அமைத்து ஒரு பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை பாபா வாங்கா அவரது தீர்க்கதரிசனத்தில் கூறியுள்ளார்.
அதாவது, "சிரியா வீழ்ச்சியடையும் போது, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். அந்த போர் மேற்கு பகுதியை அழிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சிரியா வெற்றியாளரின் காலில் விழும், ஆனால் வெற்றியாளர் ஒருவராக இருக்க மாட்டார்..” என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து ஏற்ப தற்போது சூழல் மாறிக் கொண்டே செல்கிறது.
பாபா வாங்காவின் இயற்பெயர் “வாங்கெலியா பாண்டேவா சுர்சேவா” இவரின் கணிப்பு 5079 ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறப்பட்டாலும் உலகின் முடிவைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போது, அவருடைய கணிப்புகள் குறித்து மக்களால் தேடப்படுகின்றது.
அவரது முக்கிய கணிப்புகளில் 9/11 தாக்குதல்கள், 2000 குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவு, புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரை பற்றிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது.