தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக வீர வசனங்களை பேசி பிரபலமானவர் ஜூலி.
இந்த போராட்டத்தில் பிரபலமடைந்ததை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீஸனில் கலந்து கொண்டார். இவர் கூறிய ஒரு பொய் இவருக்கு பெரிய மைனஸாக அமைந்தது.
இதனால் பிக்பாஸில் கடைசி வரை தாக்குப் பிடிக்கவில்லை. இடத்தை விட்டு வெளியேறியதும் தன்னுடைய செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலிங் நடிகையாக மாறியுள்ளார்.
நடிகைகளுக்கு போட்டியாக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் உடல் முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி நடத்தி வந்த போட்டோ ஷூட் படு வைரலானது.
இந்த நிலையில் தற்போது கலர் கலராக மேக்கப் போட்டு முகத்தில் தண்ணீரை ஒழுக விட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.