18 ஆண்டுக்கு பின் சனி - ராகு சேர்க்கை உருவாகியுள்ளது. அந்த வகையில் மீன ராசியில் மார்ச் 29ம் திகதி சனி பெயர்ச்சியாகி அங்கு சஞ்சரிக்கும் ராகுவுடன் சேர்வதால் பிசாச யோகம் உருவாகிறது என குறிப்பிடப்படுகின்றன.

சனி - ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி | Sani Rahu Serkai Kavanama Iruka Vendiya Rasi

போர், பொருளாதார சறுக்கல், தலைவர் மீது தாக்கப்படுதல், நாட்டில் அமைதியற்ற தன்மை, மக்கள் சில விஷயங்களுக்காக போராடுதல் என மோசமான சூழல் நிலவ இருக்கின்ற நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு கவனம் தேவை என நாம் இங்கு பார்ப்போம்.

சனி - ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி | Sani Rahu Serkai Kavanama Iruka Vendiya Rasi

கன்னி ராசி

சனி மற்றும் ராகுவின் சேர்க்கையால் இந்த கிரக சேர்க்கை காலத்தில் கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு, பல விதத்தில் சாதகமற்ற சூழல் உருவாகும். திருமண வாழ்க்கையில் உள்ளவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு, உறவில் விரிசல் ஏற்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் உங்களை துரத்தும். முதலீடுகள் விஷயத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் துறை நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படவும். பிசாச யோகத்தால் உங்களுக்கு பண இழப்பும், சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

சனி - ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி | Sani Rahu Serkai Kavanama Iruka Vendiya Rasi

மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுபட்டாலும், இந்த பிசாச யோகத்தால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். எந்த செயலிலும் நம்பிக்கையுடன் ஈடுபட மாட்டீர்கள். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும். உங்களின் உறவு மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவுகளை அனுசரித்துச் செல்லவும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனமாக செயல்படவும். உங்கள் வேலைகளை முடிப்பதில் சுணக்கம், அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. தேவையற்ற சண்டை, சச்சரவுகள் ஏற்படும். நிதி சிக்கல் ஏற்படும்.

சனி - ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி | Sani Rahu Serkai Kavanama Iruka Vendiya Rasi

மீன ராசி

மீன ராசிக்கு சனியின் மாற்றத்தால் ஜென்ம சனி ஆரம்பிப்பதோடு, ராகுவுடன் சேர்வதால் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். குறிப்பாக உடல் சோர்வையும், மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் தேவையற்ற நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. பொருளாதார சிக்கலால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் பிரச்னைகளும், வீட்டில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அதனால் குடும்பம், பணியிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வதும், பொறுமையைக் கையாள்வதும் அவசியம். சனி - ராகு சேர்க்கையால் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். வேலை, உறவுகளை கையாள்வதில் சூழல் கடினமாக இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கன்னி, மகரம், மீன ராசிகளுக்கு பிசாச யோகத்தால் கடினமான சூழல் உருவானாலும், அதன் பின்னர் உங்களின் வாழ்க்கையில் ஓரளவு நிம்மதி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.

சனி - ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி | Sani Rahu Serkai Kavanama Iruka Vendiya Rasi