ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் அவர்களின் 40 வயதை கடக்கும் போது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை அடைவார்களாம்.
அப்படி 40 வயதில் வாழ்வில் உச்சகட்ட முன்னேற்றத்தை அடைந்து ராஜயோகத்தை பெறும் நட்சத்திரங்கள் எவையென இந்த பதிவில் பார்க்கலாம்.
உத்திரம்
உத்திர நட்சத்திறத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் குழந்தைப்பருவம் மற்றும் இளளைப்பருவத்தில் ஏராளமான பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பார்கள்.
இவர்கள் ஆசைப்பட்ட அனைத்து விடயங்களையும் 40 வயதின் ஆரம்பத்தில் அடைவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு தானாகவே அமையும்.
இந்த வயதை அடையும் போது இவர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும் நிதி நிலையில் அசாத்தியமான மாற்றம் உண்டாகும். மொத்தத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப்படும்.
புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஆரம்ப காலத்தில் சுமாரான ஒரு வாழ்க்கைளை வாழக்கூடிய நிலையில் இருப்பார்கள்.
40 வயது வரையில் பல சிரமங்களையும் பிரச்சினையையும் இவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அதன் பின்னர் இவர்களின் வாழ்வில் பல சாதனைகள் காத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பொற்காலத்தை அதன் பின்னர் அனுபவிப்பார்கள்.
உத்திராடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 40 வயது வரையில் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகள் இருக்கும்.
இவர்கள் வீட்டுச் செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டங்களையும் கடினமான அனுபவங்களையும் சந்திப்பார்கள்.
ஆனால் இவர்கள் வாழ்வில் சந்தித்த சகல பிரச்சனைகளுக்கும் 40 வயதிற்கு பின்னர் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிநாடு சென்று அதிகளவில் சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். 40 வயதை அடையும் போது இவர்களின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படும்.