ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எரிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே அதீத நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையின் சின்னங்களாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Nakshatras People Are Extremely Honestஎந்த விடயத்தை செய்தாலும் மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

அப்படி நேர்மையின் சின்னங்களாகவே வாழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையின் சின்னங்களாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Nakshatras People Are Extremely Honest

இவர்கள் காதல் விடயமாக இருந்தாலும் சரி தொழில் விடயமாக இருந்தாலும் சரி வாழ்க்கை முழுவதும் யாரையும் ஏமாற்றிவிட கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். 

இவர்கள் பெரும்பாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையை மட்டுமே சொல்ல விரும்புவார்கள். 

வாழ்க்கை முழுதும் உண்மை, தர்மம் மற்றும் நீதியைத் தவிர வேறு எதையும் பற்றிய சிந்தனையே இவர்களுக்கு இருக்காது. இவர்களுக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் நேர்மையை மட்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். 

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் எவ்வளவு நெருக்கமானவர்கள் தவறு செய்தாலும் அதனை தட்டிக்கேட்கும் குணத்தை கொண்டிருப்பார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையின் சின்னங்களாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Nakshatras People Are Extremely Honest

இவர்களுக்கு பொய் மற்றும் துரோகத்தின் மீது தீராத வெறுப்பு காணப்படும். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் உண்மை தான் காப்பாற்றும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் அதீத நேர்மையால் பல இடங்களில் இவர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. 

மிருகசீரிஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாகுபாடு இன்னிய அன்னை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உயிர்களின் மதிப்பும் மகத்துவமும் நன்றாக தெரிந்திருக்கும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையின் சின்னங்களாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Nakshatras People Are Extremely Honest

யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும் என்பதில் மிகவும் உறுதியான மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் மீது தவறு இருந்தால், அதனை ஒப்புக்கொள்ள ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். எப்போதும் நேர்மையாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர்கள் மற்றவரை்களிடம் ஏமாறுவது மிகவும் இயல்பாகவே நடந்துவிடும்.