கறி சோறு சுவையினை மிஞ்சும் அளவிற்கு தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பிரியாணி குருணை - 300 கிராம்
தக்காளி- அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3 
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - ஒன்றரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
முழு கரம் மசாலா - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு கடலை எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, கிராம்பு - தாளிக்க

கறி சோற்றை மிஞசும் சுவையில் தக்காளி சாதம் செய்யணுமா? அருமையான டிப்ஸ் இதோ | How To Make Very Tasty Tomato Rice

செய்முறை

கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றினை சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பச்சைமிளகாய் மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

கறி சோற்றை மிஞசும் சுவையில் தக்காளி சாதம் செய்யணுமா? அருமையான டிப்ஸ் இதோ | How To Make Very Tasty Tomato Riceஇதனுடன் மிக்ஸியில் அரைத்து விழுதாக வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தொடர்ந்து அனைத்து மசாலாவினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு வந்ததும், தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும், அரிசியை சேர்க்க வேண்டும். பாதி வெந்த பின்பு தம் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கவும். கடைசியாக தக்காளி சாதம் பிரியாணி சுவையில் தயாராகியும் இருக்கும்.

இதனை முட்டை, தயிர் வெங்காயம் வைத்து சாப்பிட்டால், நிச்சயமாகவே கறி சாப்பாடு தோற்று போய்விடுமாம்.

கறி சோற்றை மிஞசும் சுவையில் தக்காளி சாதம் செய்யணுமா? அருமையான டிப்ஸ் இதோ | How To Make Very Tasty Tomato Rice