பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவரும் சிறந்தவர்களாக தான் இருப்பார்.
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் மாத்திரம் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.
தனக்கு துணையாக வரும் மனைவி அல்லது காதலியை அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்ள ஆசைப்படுவார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் இருக்கும். அதில் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த நேரம் என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில், வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த மாதங்களில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியானவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. ஆகஸ்ட் |
- ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்கள். ஏனெனின் இவர்களுக்கு இயற்கையாக பிறரை விசுவாசிக்கும் குணம் இருக்கும்.
- துணைக்கு எந்த காலத்திலும் துரோகம் நினைக்கமாட்டார்கள். இதனால் பயம் இல்லாமல் இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம்.
- சிறு பொய்களை கூட சொல்லமாட்டார்கள், ஏனெனில் இவர்களுக்கு உறவின் அருமை நன்கு தெரியும். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களிடம் பெரிதாக ரகசியம் எதுவும் இருக்காது.
- துணையிடம் அனைத்தையும் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். தனது வாழ்க்கைத் துணைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
- தனது துணையின் எதிர்பார்ப்பை சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் குணம் இவர்களின் உறவை பலப்படுத்தும். அதிலும் குறிப்பாக இவர்கள் தன் துணையிடம் ரொமான்டிக்காக நடந்து கொள்வார்கள்.
|
2. மார்ச் |
- மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் நம்பமுடியாத அளவு நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
- மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் பழக்கம் இந்த மாதம் பிறந்த ஆண்களிடம் அதிகமாக இருக்கும்.
- துணையிடம் பேசும் போது அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ளும் நபர்களாக இருப்பார்கள்.
- துணையின் பக்கத்தில் இருந்து யோசித்து அவர்களின் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வார்கள்.
- எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதனை துணையின் மீது பலி சொல்ல விரும்பமாட்டார்கள்.
- மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
|
3. ஜூன் |
- ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாக மகிழ்ச்சியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அவ்வளவு எளிதில் மற்றவர்கள் மனதை புண்படுத்த மாட்டார்கள்.
- இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் ஒருபோதும் சிரமப்படமாட்டார்கள்.
- தனது துணையின் தேவைகளை புரிந்து கொண்டு, அதன்படி வாழ்க்கை நடத்தும் நபராக இவர்கள் இருப்பார்கள்.
- மார்ச் மாதம் பிறந்த ஆண்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் என்பதால் அன்பாக பழகினால் முழு பலனையும் பெற்றுக் கொள்ளலாம்.
|