முற்காலத்தில் பல ஆரோக்கியமான உணவுகளை மக்கள் உண்டதன் மூலம் எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது மனிதனின் வாழ்க்கை காலம் அவசரமாகி விட்டதால் மோசமான வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
மரம் செடி கொடிகள் தவிர்த்து மாசுக்கள் நிறைந்த சுற்றுசூழல் காணப்படுகின்றன. இதன் மூலம் வரும் நச்சுக்காற்றால் நமது உள்ளுறுப்புக்களில் நுரையீரல் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றது.
நுரையீரல் வலுவாக இல்லை என்றால் உடல் பலவினமடைவது உறுதி. நுரையீரல் வலு இழக்க காரணம் அதில் நச்சு படிவது தான்.
நுரையீரலை வலுப்படுத்த, நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதற்கு இயற்கையில் காணப்படும் சில உணவுகள் உதவுகின்றன. அந்த உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நுரையிரல் சுவாசத்தின் மிக மக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளும் நோய்களும் வரும். நுரையீரல் ஆரோக்கியத்தை சரியான முறையில் பேணவில்லை என்றால் அது மரணத்தை ஏற்படுத்தும்.
இது பலவீனமாக இருந்தால் சளி இருமல் பிரச்சனை, சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகளை காட்டும். இஞ்சி மஞ்சள், துளசி மற்றும் புதினா போன்ற மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். தினசரி சாப்பிடும் உணவை மிகவும் சத்தான உணவாக சாப்பிட வேண்டும்.
இதற்காக புதிய பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் மற்றும் நுரையீரலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
நுரையீரல் வலுப்பெற பூங்கா போன்ற பசுமையான பகுதிகளில் இயற்கை சூழலில் 15 நிமிடங்கள் செலவிட வேண்டும். இதன் மூலம், நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீங்கும்.
உடலில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதன் மூலம் உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்க பிராணாயாமம் மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்ய வேண்டும்.